அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தின் இல்லமெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள் இன்றுகாலைஆரம்பமாகியது.
பாடசாலையின் அதிபர் திருமதி ரவிலேகா நித்தியானந்தன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
பிரதிஅதிபர் கப்டன் க.ஜனார்தன் மற்றும் உதவி அதிபர் நேசராஜாவின் ஒருங்கிணைப்பில் உடற்கல்வி ஆசிரியர் திருமதி எஸ்.கண்ணதாசன், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கே.ராமிலின் வழிநடத்தலில் போட்டி இடம்பெற்றது
விளையாட்டு நிகழ்வில் முல்லை, மருதம், நெய்தல் ஆகிய இல்லங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
பெண்களுக்கான சைக்கிளோட்டமும் இடம்பெற்றது.
இதேவேளை, எதிர்வரும் 22ஆம் திகதி அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் இறுதிப்போட்டிகள் மிகப்பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்;ளமை குறிப்பிடத்தக்கது.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்