அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தில் பேடன் பவலின் 166வது ஜனன தின நிகழ்வு

0
281

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவலின் 166வது ஜனன தின நிகழ்வுகள், அம்பாறை கல்முனை அக்கரைப்பற்று பிரதேச சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றன.

மாவட்டசாரணர் சங்கஆணையாளர் எம்.ஜ.உதுமாலெவ்பை ஒருங்கிணைப்பில் கல்முனை அக்கரைப்பற்று பிரதேச சாரணர் சங்கத்தின் தலைவரும் சம்மாந்துறை பிரதேச செயலாளருமான அல்ஹாச் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.உதயகுமார் கலந்துகொண்டார்.

விசேடஅதிதியாக மல்வத்தை இராணுவ முகாமின் 24ஆம் பிரிவு காலாட்படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதியாக சாரணர் சங்கத்தின் முன்னாள் மாவட்டபணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் பங்கேற்றார்.

சாரணர்களின் சத்தியபிரமாணம் நிக்ழவு இடம்பெற்றதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் அதிதிகளின் உரை என்பன இடம்பெற்றன.

சாரணர் சங்கத்தின் அக்கரைப்பற்று, திருக்கோவில், சம்மாந்துறை, கல்முனை வலயக் கல்வி அலுவலகஉறுப்பினர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர்.