அம்பாறை அறுகம்பே உல்லாசக் கடற்கரையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

0
123

அம்பாறை பொத்துவில் அறுகம்பைக் கடற்கரைக்கு வருகை தரும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மைய நாட்களாக சடுதியாக உயர்வடைந்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தின் அழகிய கடற்கரைகள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் நிலையில், அறுகம்பே கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த வருடங்களுடன் ஒப்புடுகையில் அதிகரித்துக் காணப்படுகின்றது. கடற்கரைகளில் ஏற்படும் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான விசேட ஏற்பாடுகளும் உல்லாச கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வருகையால், சுற்றுலாத்துறையை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரமும் வளம்பெற்று வருகின்றது.


அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி

அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில் ஆண்கள் பிரிவில் அவிசாவளையைச் சேர்ந்த விமல் காரியவசம்
முதலாமிடத்தினையும், வெலிமடயை சேர்ந்த ரத்னபால இரண்டாமிடத்தினையும், டென்மார்க்கை சேர்ந்த பெஸ்டியன் குலோஸ்கோ மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.


பெண்கள் பிரிவில் கென்யாவைச் சேர்ந்த அனிக்கா பேலிம் முதலாமிடத்தினையும், ஜேர்மனியை சேர்ந்த டீ.அனிக்கா டோன் இரண்டாமிடத்தினையும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த சஸாலி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி நேற்று
பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என 260பேர் இதில் கலந்துகொண்டனர்.