அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இப்தார் நிகழ்வு

0
113

இனநல்லுறவை வலுப்படுத்தும் இப்தார் நிகழ்வு அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்வின் உத்தியோகத்தர்களை வரவேற்று அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.றியால்டீன் உரையாற்றியதுடன் தலைமை உரையினை திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் வழங்கினார்.

இதன் பின்னராக நோன்பின் முக்கியத்துவம் பற்றி மார்க்க சொற்பொழிவை அபிவிருத்தி உத்தியோகத்தர் அபுல் காசிம் வழங்கினார். தொடர்ந்து பிரதேச செயலாளர் மதங்களும் அதன் நோக்கங்களும் பற்றி வி.பபாகரன் உரையாற்றினார்
தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் அதானை ஒலிக்கச் செய்தார்.

பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் இஸ்லாமிய சகோதரர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் சோபிதா மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.எஸ்.எம்.உவைஸ் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் பின்னராக நோன்பு திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.