‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் எண்ணக்கருவிற்கு அமைய ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகளவான குருதி நன்கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்தம் தேவைப்படும் காரணத்தால் இரத்தம் சேகரிக்கும் பணி பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இணைந்து
மேற்கொண்ட இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு உத்தியோகத்தர்கள்
கலந்து கொண்டு இரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பபாகரன் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அகிலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இரத்தம் சேகரிக்கும் பணியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு வைத்தியர் குலாறா, சிரேஸ்ட தாதிய உத்தியோகத்தர் ஆப்தீன் உள்ளிட்ட
வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.