அம்பாறை கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
அவுஸ்திரேலியா வன்னி ஹோப் நிறுவனத்தின் உதவியுடன் வைத்தியசாலை சேவை சபையினால் 15 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டன.
நன்கொடையை வைத்தியசாலை சேவை சபையின் பணிப்பாளர் ராஜவல்லே சுபுதி தேரர், கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரங்க சந்திரசேனவிடம் கையளித்துள்ளார்.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான 03 படுக்கைகள், 02 மின்சார அனுசரிப்பு பிரசவ படுக்கைகள், 02 டயாலிசிஸ் படுக்கைகள், சிசு சூடு மற்றும் சிசு இன்குபேட்டர்
ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கல்முனை பிரதேச மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கமுடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.