அம்பாறை கல்முனையில்,யானைகளை விரட்டும்சிறுவர்கள்- ஆபத்தை உணராதசெயல் என விமர்சனம்

0
89

அம்பாறை கல்முனை மாநகர எல்லைப் பிரதேசங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு, வன ஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்காத
நிலையில், பிரதேச சிறுவர்கள், ஆபத்தை உணராது, யானைகளை விரட்டும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


கல்முனை சாய்ந்தமருது மற்றும் நற்பிட்டிமுனை பிரதேச வயல் பகுதிகளில், தொடர்ச்சியாக 8 முதல் 10 வரையான யானைகள் உணவுக்காக வருகை தருவதோடு, குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் நுழைந்து, சேதங்களை ஏற்படுத்துகின்றன.
இப் பகுதிகளில், இரவு மற்றும் பகல் வேளைகளில் அச்சத்தின் மத்தியில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், யானைகளை, ஆபத்தை உணராது, அப் பிரதேச சிறுவர்கள் விரட்டி வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.


இது உயிராபத்தையும், உயிர்ச்சேதங்களையும் விளைவிக்கும், அபாயமுள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திணைக்களங்கள், உரிய நடவடிக்கையினை
எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.