அம்பாறை கல்முனையில் இலங்கை மின்சார சபையினர், கல்முனை மின்சார சபையின், தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இன்றையதினம் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
சுமார் 50க்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் பங்கேற்றியிருந்தனர்.
2024 ஆண்டிற்கான சம்பள உயர்வை உடனடியாக வழங்கு, சம்பள முரண்பாட்டு தீர்வை உடனடியாக வழங்கு, வேலை நீக்கம் செய்த 62 தொழிலாளர்களை உடனடியாக சேவையில் இணைத்துக் கொள், போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.