அம்பாறை கல்முனையில் ஐஸ் போதைப் பொருளுடன் இரு சந்தேக நபர்கள்கைது

0
72

அம்பாறை கல்முனையில், விசேட அதிரடிப்படையினரால், ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைதாகினர்.

கைது செய்யப்படடவர்களில், கல்முனைக்குடி 9ம் பிரிவு மதிரிஸா வீதியில் வசிக்கும் சந்தேக நபரிடமிருந்து 970 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளும், கல்முனைக்குடி 2ம் பிரிவு கிறீன் பீல்ட் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரிடமிருந்து 870 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் சான்றுப் பொருட்களுடன், கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.