அம்பாறை கல்முனையில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்புத்தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு

0
71

அம்பாறை கல்முனையில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்புத்தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு செயலமர்வு இன்று இடம்பெற்றது.

புகைத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வலுவான தேசத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழிப்புணர்வில் தலைமைப்பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


கடந்த 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி வாரத்தில் அதிக படியான கொடி விற்பனை செய்து முதலாம் இடத்தை பெற்று கொண்ட வங்கி முகாமையாளர், பிரதி முகாமையாளர், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் அதிதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.