அம்பாறை கல்முனை ஆதார வைத்தியாலையில் சேவை ஆற்றி மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லவுள்ள பொது மயக்க மருந்து நிபுணர் வைத்தியர்
மிகிரு உதயங்கவின் சேவையை பாராட்டி வழி அனுப்பி வைக்கும் நிகழ்வு, வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
வைத்தியர் உதயங்க வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் ,சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமீம் உள்ளிட்ட குழுவினரால் பொன்னாடை
போர்த்தி, பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் துறைசார்ந்த வைத்திய நிபுணர்கள், பொது வைத்தியர்கள், சத்திர சிகிச்சை பிரிவு தாதி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.