அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ,தாய் தந்தையை இழந்த விசேட தேவையுடைய, தெரிவு செய்யப்பட்ட சுமார் நூறு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தினது பழைய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும், ‘அஸ்-ஸுஹராவுடன் மீள் இணைவோம்’ தொனிப்பொருளில், உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் நிகழ்வு இடம்பெற்றது.
கற்றல் உபகரணங்களுக்கான இரண்டு இலட்சம் கொடுப்பனவுகள் ,பாடசாலையின் பழைய மாணவ செயலாளர் அஜ்வத்தினால் ,பாடசாலை அதிபர் மஜீதியாவிடம் கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி சம் சம், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன், நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வும் பாடசாலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.