அம்பாறை கல்முனை பிரதான வீதியூடான வெளிநாட்டு சிகரெட்களைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில், இருவரை பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினர்
இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த முச்சக்கரவண்டியை இடைமறித்து சோதனை மேற்கொண்டபோதே, சூட்சுமமான முறையில், கடத்திச் செல்லப்பட்ட
பெருந்தொகை வெளிநாட்டுச் சிகரெட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைதான சந்தேக நபர்கள் சான்றுப் பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.