அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இப்தார் நிகழ்வு

0
90

அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
எம்.ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண கலந்து பொண்டார்.
அதிதிகளாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ,
கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன், அரச சட்டவாதி எம்.ஏ.எம். லாபீர், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்அலி,
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம,
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், இராணுவ, கடற்படை அதிகாரிகள் பொலிஸ்
பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட சர்வமத தலைவர்கள், மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.