டெங்கு கட்டுப்பாட்டு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் காலை 6.00 மணி தொடக்கம் மாநகர சபைக்குட்பட்ட 04 சுகாதார வலயங்களிலும் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மாநகர சபையின் பிரதான அலுவலக வளாகம், பழைய கட்டிடத் தொகுதி வளாகம், பொது நூலகங்கள் மற்றும் மாநகர சபையின் கீழ் உள்ள பொது இடங்களும்
மாநகர சபை உத்தியோகத்தர்களினால் சிரமதானம் செய்யப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டன.