அம்பாறை கல்முனை வடக்கில், 6 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச அரிசி

0
179

அம்பாறை கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி விநியோகிக்கப்படவுள்ள நிலையில்,
கல்முனை தெற்கு சமுர்த்தி வங்கிப் பிரிவில் கல்முனை வடக்கு சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் கே.இதயராஜ் தலைமையில் பயனாளிகளுக்கான
அரிசி விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கல்முனை வடக்கில் சமுர்த்தி நன்மைபெறுகின்றவர்கள், சமுர்த்தி காத்திருப்பு பட்டியலிலுள்ளவர்கள், சமூக சேவை திணைக்களத்தின் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்கின்ற மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் என தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 10 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டது.


பயனாளிகளுக்கு அரிசி வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் வி.சிறிநாதன், கிராம நிர்வாக உத்தியோகத்தர்
ஏ.அமலதாஸ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.