அம்பாறை கல்முனை வடக்குஆதார வைத்தியசாலை,ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளிவிருதை சுவீகரிக்க உதவியர்களுக்குகௌரவிப்பு

0
73

அம்பாறை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, 2024ம் ஆண்டிற்கான ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருதைப் பெற்றுள்ள நிலையில், விருதினைப்
பெற்றுக்கொள்ள ஒத்துழைத்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில், வைத்திய சாலை பணிப்பாளர் டொக்டர் ஏ.பி.ஆர்.எஸ்.சந்திரசேன
தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் இரா.முரளீஸ்வரன்
கலந்து கொண்டார்.


வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்கள், பிரதேச செயலாளர், தாதி உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும்
கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.