அம்பாறை கல்முனை வடக்குப் பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் பொங்கல் விழா, கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் திருமதி ஜெனித்ரா தேவசந்திரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
பிரதம அதிதியாக கல்முனை வடக்குப்பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்து கொண்டார். மாணவர்களுக்கான கோலப்போட்டியில், பாண்டிருப்பு விஷ்னு வித்தியாலய பாடசாலை மாணவர்களும், கலாசார மத்திய நிலைய மாணவர்களும் பங்கேற்றனர். மாணவர்களுடைய ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம்பெற்றதோடு, பரிசில்களும் வழங்கப்பட்டன.