அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம்

0
107

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக, நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பிரதேச செயலக நுழைவாயில் போராட்டக்காரர்களால் மூடப்பட்டு, அதிகாரிகளை உள்ளே நுழைய விடாது தடுக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பெருந்திரளான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக, நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக 92 ஆவது நாளாக இன்றும் போராட்டம் இடம்பெறும் நிலையில், பல்வேறு கோசங்களையும் மக்கள் எழுப்பி வருகின்றனர்.