காரைதீவு விளையாட்டுக்கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூக நிலையம், சொர்ணம் நகை மாளிகையினரும் இணைந்து நடாத்திய புதுவருட வெள்ளிவிழா கலாச்சார பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு விழா காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.
கழகத்தலைவர் தவக்குமார் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வீதிப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் மரதன் ஓட்டமும் மாலை நிகழ்வாக தலையணைச்சமர் முட்டி உடைத்தல், தேங்காய் துருவுதல், மிட்டாய் பை ஓட்டம், பலூன் ஊதி உடைத்தல், போன்ற கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதோடு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கல்வி சாதனையாளர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்கள்.
நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், காரைதீவு பிரதேசசெயலாளர் எஸ்.ஜெகராஜன் சம்மாந்துறை உதவி வலயக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா என பலர் கலந்து கொண்டனர்.