அம்பாறை கிட்டங்கி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

0
119

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கும் இவ்வீதி வெள்ளத்தில் மூழ்கியதால்,
சவளக்கடை அன்னமலை, சொறிக்கல்முனை 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொலனிகள், நாவிதன்வெளி பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கிட்டங்கி வீதியில், நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால்
நிறைவேற்றப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.