அம்பாறை சாய்ந்தமருதுகொலைச் சம்பவம்:ஐவரை அதிரடியாகச் சிக்கினர்

0
102

அம்பாறை சாய்ந்தமருதில் நேற்று அதிகாலை பதிவான கொலைச் சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேக நபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப பிரச்சினை முற்றிய நிலையில், மனைவியின் தந்தையை, மருமகன் தாக்கியதில், அவர் பரிதாபமாகச் சாவடைந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரதேச பரிசோதனைகளின் பின்னர், நேற்றிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இச் சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்த சாய்ந்தமருது பொலிஸார் 33 வயதான பிரதான சந்தேக நபரைக் கைது செய்ததோடு, கொலைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தில் இளைஞர்கள் நால்வரையும் கைது செய்துள்ளனர்.