அம்பாறை திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால், திருக்கோவில் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான
கண் பரிசோதனை முகாம் நடாத்தப்பட்டது.
திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இப் பரிசோதனையின் போது,
திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் பங்கேற்றனர்.
கண் பரிசோதனைகளை அக்கரைப்பற்று ஆதார வைத்தியின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் றஜாப்பின் ஒத்துழைப்புடன் கண் பரிசோதனைப் பிரிவு வைத்தியர்
இம்ரான் மற்றும் தாதியர்கள் முன்னெடுத்தனர்.