அம்பாறை திருக்கோவில் 04 மண்டானை கிராமத்தில் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடுப்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான
அடிகல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் 04 மண்டானை கிராமத்தில் இன்று இடம்பெற்றது.
கனடாவில் வாழும் கொழும்பு மொறட்டுவ பல்கலைக்கழக பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன் 25 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ள நிலையில்,
முதற் கட்டமாக ஜந்து வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி நிதி அனுசரனையாளரான பாபினி கிரிதரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.