அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநரால், பயனாளிகள் இருவருக்கு வீடுகள் வழங்கப்பட்;டன.
திருக்கோவில் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வீடற்று வாழ்ந்து வந்தவர்களுக்கே, மீள்குடியேற்ற வீட்டு திட்டத்தின் ஊடாக,
மீள் குடியேற்ற அமைச்சின் நிதி பங்களிப்புடன் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருக்கோவில் 04 மற்றும் சாகாமம் கிராம சேவையாளர் பிரிவுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்
பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழத் தலைவருமான டபிள்யு.டீ.வீரசிங்க, திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.நிருபா
உட்பட பலரும் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.