அம்பாறை திருக்கோவிலில் வீடொன்று தீக்கிரையானது!

0
92

அம்பாறை திருக்கோவில், விநாயகபுரம் பகுதியில், வீடொன்று தீக்கிரையான சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது.

தீ அயலவர்களின் முயற்சியால் கட்டுப்படுத்தப்பட்ட போதும், வீட்டிலிருந்த உடமைகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தீ விபத்து சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரிடம் வினவிய போது, தான் காலையில் எழுந்து விவசாய காணிக்குள் நீர் இறைப்பதற்காக
சென்ற போதே இவ்வனர்த்தம் நிகழ்ந்ததாகக் கூறியுள்ளார்.