சமாதானமும் சமூகபணியும்நிறுவனத்தின் அனுசரனையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இனங்களுக்கிடையிலான கலாசாரத்தை பகிர்ந்துகொள்ளும் மாபெரும் நிகழ்வு அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.
சமாதானமும் சமூக பணியும் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ரோகிணியின் வழிகாட்டலில், திருக்கோவில் பிரதேச நல்லிணக்க குழு இணைப்பாளர் எஸ்.தேவராஜன்; தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டமேலதிகஅரசாங்கஅதிபர் வே.ஜெகதீசன் பிரதம அதிதியாககலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலகஉதவிச்செயலாளர் க.சதிசேகரன், சமாதானமும் சமூகப்பணியும்; நிகழ்ச்சிதிட்ட இணைப்பாளர் நமச்சிவாயம் பாஸ்கர் மற்றும் சாகாம விசேடஅதிரடிபடைமுகாம் பொறுப்பதிகாரி, திருக்கோவில் பொலிஸ் நிலையஉத்தியோத்தர் மற்றும் திருக்கோவில் காஞ்சிரன் குடா இராணுவமுகாம் கட்டளை அதிகாரி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இன நல்லிணக்கம் மற்றும் இனங்களின் கலாச்சாரத்தை பகிர்ந்துகொள்ளும் முகமாக திருக்கோவில் பிரதேச நல்லிணக்க குழு மற்றும் இறக்காம நல்லிணக்க குழுவினரும் இணைந்து நடாத்திய கலாச்சாரநிகழ்வுடன் கூடிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
இன ஜக்கியத்தினை சமூக இன கலாச்சார வேறுபாடுகளுக்கு அப்பால் உருவாக்கும் செயற்த்திட்டத்தின் மூலம் ஒரு வருடகாலாக இயங்கிகொண்டுவரும் திருக்கோவில் பிரதேச இன நல்லிணக்க குழு உறுப்பினர்களின் முன் மாதிரி ஏற்பாடாக நிகழ்வு ஏற்பாடூ செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.