அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் உலக சுற்றாடல் வாரத்தினையொட்டியதாக மரம் நடுகை இன்று முன்னெடுக்கப்பட்டது.
திருக்கோவில் பிரதேச திட்டமிடல் பிரிவின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பிரிவு உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பில் தம்பிலுவில் எதிரொலி விளையாட்டுத் திடலில் நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.நிருபா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.பி.சீலன், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர் எஸ்.ராஜன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள, கிராமசேவை உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆயூர்வேத வைத்தியர் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தம்பிலுவில் எதிரொலி விளையாட்டு மைதானம், ஆயூர்வேத வைத்தியசாலை மற்றும் மணற்காடு அருணோதயா வித்தியாலயம் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.