அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தின் அடையாளமான மணிக்கூட்டுக்கோபுரம் புனர் நிர்மானம் செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. திருக்கோவில் பிரதேசத்தில் இயக்கமற்று காணப்பட்ட மணிக்கூட்டு கோபுரமானது தேவ சேனாதிபதி அமைப்பின் அனுசரனையில் பொதுமக்களின் நிதிப்பங்களிப்பில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு மாணவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் சமயத்தலைவர்கள், திருக்கோவில் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர், திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் திருக்கோவில் கிராமசேவகர் திருக்கோவில் பொலிஸ்நிலைய உத்தியோகத்தர், திருக்கோவில் தேவ சேனாதிபதி அமைப்பின் உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.