மாணவர் மகிமை வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் வேலை திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் நிஸ்மி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை, நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயம், நிந்தவூர் அல் மினா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாதணிகள் வைக்கப்பட்டன.
நிகழ்வில் பாடசாலை அதிபர்களான அப்துல் கபூர், ஹாமிது, றாபிஉ மற்றும் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் மாணவ பாராளுமன்றத்தின் சமுதாய தொடர்பு விருத்தி மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எப்.அப்துல்லாஹ் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும்...