அம்பாறை பெரியநீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது

0
153

அம்பாறை பெரியநீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும், புதிதாக நியமனம் பெற்ற அதிபர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் ஆசிரியர் வி.கமலதாசன் தலைமையில் பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக அம்பாறை வீதி அபிவிருத்தி அதிகாரசபை சிரேஸ்ட பொறியியலாளர் ஏ.குமரேந்திரன் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக விஷ்ணு மகா வித்தியாலய அதிபர் எஸ்.சுதர்சன், சமூக செயற்பாட்டாளர் கே.சுதீபன், கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் செயலாளர் ஆர்.சுபராஜ் உட்பட பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்
பெரியநீலாவணை கிராமத்தில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 11 மாணவர்களும், புதிதாக அதிபர் சேவைக்கு தெரிவாகிய 7 அதிபர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.