அம்பாறை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் அதிபர் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது

0
167

அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் நீண்டநாள் தேவையாக இருந்த அதிபருக்கான காரியாலயம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் முதல்வர் உபைதுல்லாஹ்வின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சகுதுல் நஜீம், விஷேட விருந்தினராக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் ஹபீபுல்லாஹ் மற்றும் இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளன செய்ற்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோரும்,
காணி உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.கிபாயத்துல்லாவும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலைக்கான விடுதி வசதியினை அமைப்பதற்குரிய காணிப் பத்திரம் காணி உத்தியோகத்தர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரினால் பாடசாலை அதிபரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.