அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னர், கடற்கரையோரங்களில் விச ஜந்துக்களின்
நடமாட்டங்கள் அதிகரித்துக் காணப்படுகிறது.
மருதமுனை,பாண்டிருப்பு, பெரியநீலாவணை,நிந்தவூர்,அட்டாளைச்சேனை,ஒலுவில், அக்கரைப்பற்று,தம்பிலுவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில்,
வெள்ளம், கடலைச் சென்றடைந்த இடங்களுக்கு அண்மையாகவே, விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கடற்கரைக்குச் செல்லும் மக்களை அவதாமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தத்தின் பின்னர், அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த நெற் பயிர்கள் அழிவடைந்துள்ளன.
காலநிலை சீராகியுள்ள போதும், வயல் நிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினால், பயிர்கள் அழிவடைந்துள்ளதாக
குறிப்பிடும் விவசாயிகள், விளைச்சல் பாரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் கவலையடைந்துள்ளனர்.
