அம்பாறை காரைதீவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர்; சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் தொடர்பிலான நூல் வெளியீடானது நேற்று இடம்பெற்றது.
நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பி.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் காரைதீவு அமைப்பாளர் ரி.ஞானேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்று பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரன், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவ, மாணவிகளும் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
நேற்று இடம்பெற்றது.
க.பொ.த.உயர்தரபரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும் 77மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச செயற்குழு உறுப்பினர் நவனீதன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது
.
நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன், அக் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார், கோட்டக் கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
