அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர்.
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் உதுமாலெப்பை முகமது முஹ்சீன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
காரைதீவு சந்திக்கு அருகாமையில் ஆரம்பமான போராட்டத்தில், பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் பட்டதாரிகள் ஏந்தியிருந்தனர்.
‘எதிர்காலத்தினை அழிக்காதே’, ‘பட்டதாரிகள் வீதிகளில் நின்றால் நாடு முன்னேறுவது எவ்வாறு?’ போன்ற பல்வேறு கோசங்களையும் பட்டதாரிகள் எழுப்பினர்.
போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது