அம்பாறை அக்கரைப்பற்றுபொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாச்சிக்குடா பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றவாள் வெட்டுச்சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வாள்களுடன் நபரொருவரை குழுவொன்று விரட்டிய நிலையில், அவர் தனது சகோதரியின் வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ளார்.
அவ் வீட்டினுள் நுழைந்த வாள்வெட்டுக் குழு, வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில், தகவலறிந்து வருகை தந்த அயல் வீட்டார் மீதும் வன்முறைக் குழு தாக்குதல் நடாத்தியள்ளது. 30 நிமிடங்களுக்கு மேல் அப் பகுதியில் வன்முறைக் குழுவின் அட்டகாசம் நீடித்துள்ளது. வீட்டிலிருந்த சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த அக்கரைப்பற்றுப் பொலிஸார், நிலைமைகளைப் பார்வையிட்ட பின்னர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.