அரசாங்கத்தின் விஷேட கொடுப்பனவு
வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

0
191

அரசாங்கத்தினால் சமுர்த்தி பயணாளிகள் முதியோர் சிறு நீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் விஷேட கொடுப்பனவு வழங்குவதை பார்வையிடும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சத்திய சீலன் தலைமையிலான பணிப்பாளர்கள் அடங்கிய குழு காத்தான்குடி மற்றும் புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கிச் சங்கங்களுக்கு விஜயம் செய்தனர்.

இதன் போது சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர்களான எ.எல்.ஸியாட் பஹ்மி. எஸ்.எச்.முசம்மில் ஆகியோரை சந்தித்து கொடுப்பனவு விபரங்களை கேட்டறிந்து கொண்டனர்.

இந்த விஷேட கொடுப்பனவை துரிதமாக வழங்குமாறும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்த விஷேட கொடுப்னவு சமுர்த்தி பயணாளிகள். சிறு நீரக நோயாளர்கள். முதியோர் கொடுப்பனவு பெறுபவர்கள். காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.