அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

0
87

சுதந்திர கல்வி  மற்றும் வைத்தியதுறையினை தனியாருக்கு விற்பதாக கூறி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – விகாரமகாதேவி பூங்கா பூங்காவிலிருந்து சுகாதார அமைச்சை நோக்கி பல்கலைக்கழக வைத்தியத்துறை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் ஏராளமான பொலிஸார், கலக தடுப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர்.