கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும், தமக்கு நெருக்கமானோருக்கும் வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க உதவி செய்வதாக கூறப்படும் சுங்கம் மற்றும் வருமான வரி திணைக்களத்தின் அதிகாரிகள் தொடர்பில் உளவுப் பிரிவு சிறப்பு அறிக்கையொன்றினை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது. சுமார் 600 அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தி மேலதிக விடயங்களை அறிவிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுங்கத் திணைக்களம் மற்றும் வருமான வரித் திணைக்களம் ஆகியவற்றால் வசூலிக்க முடியுமான சுமார் 10 ஆயிரம் கோடி ரூபா வருமானம், அத்திணைக்களத்தில் அதிகாரிகளின் மோசடி மற்றும் கவனக் குறைவுகளால் அரசாங்கத்துக்கு இல்லாமல் போவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையிலேயே சுமார் 600 அதிகாரிகள் குறித்து உளவுத் துறை அரசனக்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில், அரசாங்கம், அரசின் வருமானத்தை முகாமைத்துவம் செய்ய, வருமான முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றது.