அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், துறைமுகங்கள், மின்சாரம், நீர் வழங்கல், வங்கிகள், பெற்றோலியம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் உட்பட 40 தொழில்சங்கங்கள் இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
அரசாங்கத்தின் அநீதியான வரிக் கொள்கைக்கு எதிராக தொழில்சங்கங்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிமனையில் கூடி இறுதி முடிவுகளை எடுக்கவுள்ளன.
இதன்போது, எதிர்வரும் 9ஆம் திகதிக்கு பின்னர் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.