அரசியல் ஊழலை தேசிய மக்கள் சக்தியும் பேணி வருகிறது-தமிழரசின் திருகோணமலை வேட்பாளர் ஆ.யதீந்திரா

0
49

தேசிய மக்கள் சக்தி அரசியல் ஊழலைப் பேணி வரும் தரப்பு என தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் ஆ.யதீந்திரா,
தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய தினம், மூதூரில், மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட பின்னர், கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.