அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு யோசனைகளில் அரசியல் இல்லை!

0
58

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனைகளில் எந்தவித அரசியல் நோக்கமுமில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


இன்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் இவ்வாறுகுறிப்பிட்டார். முடிந்தவரையில் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்கவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் உதய செனவிரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு வழங்கிய பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களின் அடிப்படையில் சம்பள அதிகரிப்பு பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது. என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.