அரச திணைக்களங்கள், மாவட்ட செயலகங்களிலும் நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

0
14

‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ தொனிப்பொருளில் நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் அரச திணைக்களங்கள், மாவட்ட செயலகங்களிலும் இடம்பெற்றிருந்தன.

இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்களின் பேண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் தேசிய கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேசியம் கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன.

நிகழ்வில் இலங்கை இராணுவ அதிகாரிகள், பொலிஸார், மத குருமார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை வவுனியா மாவட்ட செயலகத்திலும் நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையான முறையில் மூவின கலாசார பாரம்பரியத்துடன் இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் தேசியக் கொடி ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியாகேத்தர்களால் தமிழ் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களிற்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ் சிங்கள முஸ்லிம் கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

சுதந்திர தின நிகழ்வுகள் மன்னார் மாவட்ட செயலகத்திலும் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

தேசிய கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

நிகழ்வைத் தொடர்ந்து சமாதான புறா பறக்கவிடப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.