அரலங்கவில பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

0
131

பொலன்னறுவை அரலங்கவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனிச்சாகல காட்டுப் பகுதியில், நபரொருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று முன்தினம் (13) உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ருஹுனுகம அரலங்கவில பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயது நபரே உயிரிழந்துள்ளார்.

வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்ட இருந்த போதே குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.