29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரிசியை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை

தற்போதுள்ள கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் அரிசியை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ‘நிலையான நாட்டிற்கு ஒரு வழி’ செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற காலத்தின் அரிசி விலைக்கும் தற்போதைய அரிசியின் விலைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகிறது.

தற்போது ஒரு கிலோ வெள்ளை அரிசியை 125 முதல் 130 ரூபா வரை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

நெல் கொள்வனவு செய்வதற்கு போதியளவு பணம் திறைசேரியில் இருந்து வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக சிறுபோக பருவத்தில் நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.

வனவிலங்குகளினால் விவசாயத்திற்கு ஏற்படும் சேதங்களும் மிகப் பெரியது.
அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles