அர்ஜென்டினா துணை அதிபரைசுட்டு கொல்ல முயன்றவர் கைது

0
164

அர்ஜென்டினாவின் துணை அதிபரை சுட்டுக் கொல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் து ணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மீது, ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கிறிஸ்டினாவை அவரது நெற்றியை குறிவைத்து சுட்டுள்ளார். ஆனால், பிஸ்டல் செயல்படாத காரணத்தால் கிறிஸ்டினா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.இது குறித்து, அர்ஜென்டினாவின் அதிபர் ஆல்பர்டோ கூறுகையில், ”இது, 1983ல் நாம் ஜனநாயகத்தை மீட்டெடுத்த பின் நடைபெற்ற மிக மோசமான சம்பவம். மக்களின் அமைதியை சீர்குலைக்கும் இதுபோன்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்றார். ‘கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்’ என போலீசார் தெரிவித்தனர்.