சிஐஏ டிரோன் தாக்குதலில் அல்கொய்தா தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக, அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராகவும், மாஸ்டர் மைன்ட்டாகவும் செயல்பட்டு வந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்காவின் சீல் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொன்றனர்.
இதன் பின்னர் இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டநிலையில், தற்போது மீண்டும்
தலை தூக்கி உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.