கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சவுதி கிளப் அல் நாசர் அணியின் போர்த்துகேய பயிற்சியாளர் லூயிஸ் காஸ்ட்ரோ அணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
ஆசிய சம்பியன் லீக் போட்டியில் ஈராக்கின் அல் ஷோர்டாவுடன் திங்கட்கிழமை விளையாடிய அல் நாசர் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை அடைந்த பின்னர் அவர் வெளியேறுவதாக அறிவித்தார். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரொனால்டோவின் வருகைக்குப் பிறகு, அல் நாசரை விட்டு வெளியேறும் மூன்றாவது பயிற்சியாளர் ஆவார்.