அவசரகால சட்டம் குறித்து வெளியான தகவல்!

0
112

இம்மாதம் 27ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள அவசரகால சட்டம் இனி நீடிக்கப்படாது என்ற நிலைமை காணப்படுகிறது.
கடந்த மாதம் 27ஆம் திகதி நாடாளுமன்றில் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஓகஸ்ட் 27ஆம் திகதியுடன் நிறைவடையும் குறித்த சட்டத்தை நீடிக்க வேண்டுமெனில் மீண்டும் நாடாளுமன்றின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும். ஆனால் தற்போது 27ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென்பது தெரியவந்துள்ளது.
எனவே, ஓகஸ்ட் 27ஆம் திகதிக்கு பிறகு இந்த சட்டம் தானாக இரத்தாகும் நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.