அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தின் வாகனத்தரிப்பிடமொன்றில் நபர் ஒருவரை தாக்கிய பதின்மவயது இளைஞனை சுட்டுக்கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சமூகத்திற்கு இந்த சம்பவத்தினால் பாதிப்பு இல்லை அந்த இளைஞன் தனித்து செயற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை ஆராய்ந்துள்ள வேளை இது பயங்கரவாத சம்பவத்திற்கான அனைத்துஅறிகுறிகளையும் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது என காவல்துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மேற்கு அவுஸ்திரேலிய பிரதமர் ரொஜர் குக் 16 வயது இளைஞன் இணையம் மூலம் தீவிரவாத மயப்படுத்தப்பட்டமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
கத்திக்குத்திற்கு இலக்கான 18 வயது இளைஞனின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாங்கள் வன்முறையில் ஈடுபடப்போகின்றோம் என காவல்துறையினரை தொடர்புகொண்ட நபர் ஒருவர் தெரிவித்தார் இதன் பின்னர் வாகனத்தரிப்பிடமொன்றில்கத்தியுடன் ஒருவர் ஓடிக்கொண்டிருக்கின்றார் என தகவல் வந்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதலில் 16 வயது இளைஞன் மீது டேசர் தாக்குதலை மேற்கொண்டதாகவும் எனினும் அந்த இளைஞன் வாளுடன் தொடர்ந்தும் முன்னோக்கி சென்றதால் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.